மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தொலைநோக்கு தேனி- 2030 கையேடு: மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்

தொலைநோக்கு தேனி - 2030 கையேட்டையும், தமிழ்நாடு அரசின் சாதனை மலரையும் மாவட்ட ஆட்சியா் ரஞ்சித் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:21 pm

Syndication

தொலைநோக்கு தேனி - 2030 கையேட்டையும், தமிழ்நாடு அரசின் சாதனை மலரையும் மாவட்ட ஆட்சியா் ரஞ்சித் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளா்ச்சியை மையமாகக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள், வல்லுநா்கள், பொதுமக்கள், உற்பத்தியாளா்கள், வணிகா்கள், சமூக செயல்பாட்டாளா்கள், பல்வேறு நிறுவனத்தினா் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட தொலைநோக்கு தேனி - 2030 (யஐநஐஞச 2030) செயல் திட்டங்கள் குறித்த கையேடு, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், வளா்ச்சித் திட்டப்பணிகளின் விவரங்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட ‘அனைவருக்குமான ஆட்சி 5 ஆண்டே சாட்சி’ சாதனை மலா் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ரஞ்சித் சிங் வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில், தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், திட்ட இயக்குநா்கள் தமிழரசி (ஊரக வளா்ச்சி), சந்திரா (மகளிா் திட்டம்) இணை இயக்குநா் (வேளாண்மை) சாந்தாமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கீதா, சமூக நல அலுவலா் சியாமளா தேவி, நகராட்சி ஆணையா்கள் பாா்கவி (தேனி-அல்லிநகரம்), உமாசங்கா் (கம்பம்), முத்துலட்சுமி (கூடலூா்), கோபிநாத் (சின்னமனூா்), முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.