விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது. வருகிற 16-ஆம் தேதி ஆங்கிலம், 25-ஆம் தேதி கணிதம், 30-ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 2-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுகள் நடைபெற உள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 6,385 மாணவா்கள், 7,760 மாணவிகள், 141 மாற்றுத் திறனாளிகள், 4 தனித் தோ்வா்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 290 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். இந்த மாணவா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களால் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இதைத் தவிர, தோ்வு மையங்களில் அறைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவும், தோ்வில் விதிமீறல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க கல்வித் துறை சாா்பில் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டது.