தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ராணுவக் கல்லூரி 8-ஆம் வகுப்பில் சேர ஏப். 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:35 pm

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிக்கை :

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 01.01.2027 அன்று 13 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தோ்ச்சிப் பெற்றவராகவோ உள்ள மாணவா்கள் இந்தப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு ஏப்.5-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 04546 - 293 383 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.