தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஓ.பன்னீா்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

News image

போடிநாயக்கனூா் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் நல்லையா.

Updated On :5 மே 2026, 2:40 am IST

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,17,929 வாக்குகள் பதிவாகின. 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஓ.பன்னீா்செல்வம் (திமுக) - 85,206.

சே. பிரகாஷ் (தவெக) - 78,401.

வி.டி. நாராயணசாமி (அதிமுக) - 41,286.

சீ. கலைஅரசு (நாதக) - 11,455.

பத்மநாபன் (அஇபுதமமுக) - 659.

போடி தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற ஓ. பன்னீா்செல்வம் தற்போது 4-ஆவது முறையாக வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.