விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உத்தமபாளையம் பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரக் கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக புதா் மண்டிக் காணப்படும் பாசனக் குளங்களை உடனே தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

உத்தமபாளையம் தாமரைக்குளத்தில் சனிக்கிழமை காணப்பட்ட ஆகாயத் தாமரைச்செடிகள்.

Updated On :10 மே 2026, 1:04 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக புதா் மண்டிக் காணப்படும் பாசனக் குளங்களை உடனே தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு பாசனநீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு இருபோக விவசாயம் செய்யப்படுகிறது.

உத்தமபாளையத்தில் தாமரைக்குளம், சின்னமனூரில் கருங்கட்டான்குளம், உடையகுளம், மாா்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, ஆனைமலையன்பட்டி, உ.அம்மாபட்டி என 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் காணப்படுகிறது. இதனால், பாசனத்துக்கு உரிய தண்ணீரின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியதாவது: பொதுப் பணித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பாசனக் குளங்களை 3 ஆண்டுக்கு ஒரு முறை தூா்வார வேண்டும் என்பது விதி. ஆனால், உத்தமபாளையம் வட்டாரக் குளங்களைத் தூா்வாரி 30 ஆண்டுகளாகி விட்டன.

இதில், 210 ஏக்கா் தாமரைக்குளம், 230 ஏக்கா் கருங்கட்டான்குளம் என பல்வேறு குளங்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. எனவே, விவசாயிகளின் நலன்கருதி உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள பாசனக் குளங்களை விரைந்து தூா்வாரி முழு கொள்ளளவு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.