கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:15 am IST

மயிலாடும்பாறை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (53). விவசாயியான இவா், திங்கள்கிழமை கடமலைக்குண்டுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தாா்.

கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை சாலையில் சென்ற போது, இந்த வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.