இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வீரபாண்டி கோயிலுக்கு காவடி நோ்த்திக்கடன்

News image
Updated On :15 மே 2026, 4:20 am IST

போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை 22 கி.மீ. நடந்து சென்று காவடி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு குறிப்பிட்ட நாயக்கா் சமூகத்தினா் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். தேனி அருகே வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் போது, பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்றை நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.

கரட்டுப்பட்டி கிராம மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாண்டிக்கு நடந்தே சென்று அக்னிச்சட்டி, அலங்கார காவடி எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இந்த ஆண்டும் இந்த கிராம மக்கள் 22 கி.மீ. நடந்து சென்று 40 கிலோவுக்கும் அதிக எடையுள்ள அலங்காரக் காவடிகளை பாரம்பரிய தேவராட்டம் ஆடியபடி சுமந்து சென்றனா். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, ஆடிப்பாடி

வீரபாண்டிக்கு சென்றனா்.