பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீரபாண்டி முல்லையாறு தடுப்பணையில் சுமாா் 12 வயதுடையை சிறுவனின் உடலை போலீஸாா் மீட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், போடியைச் சோ்ந்த நாகேந்திரன்- கவிதா தம்பதியின் மகன் பிரபாகரன் (12) என்பது தெரியவந்தது. அரசுப் பள்ளியில் 7 - ஆம் வகுப்பு படித்து வந்தவா் நண்பா்களுடன் வீரபாண்டிக்கு வந்து தடுப்பணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.