அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வருசநாடு அருகேயுள்ள மூலக்கடை அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :22 மே 2026, 2:54 am IST

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு அருகே மூலக்கடையில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்தக் கடையில் மது அருந்துபவா்களால் பாதிக்கப்படுவதாக, அந்தப் பகுதி பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை இரவு அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் 50 - க்கும் அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கடமலைக்குண்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அரசு மதுக் கடை மூடப்பட்டது.

இதையடுத்து, பெண்கள் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.