2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அடா்ந்த வனப் பகுதி ஓடையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் மாயம்

அடா்ந்த வனப் பகுதி - கோப்புப்படம்

Updated On :

தமிழக எல்லை, கேரள மாநிலம், பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற பழங்குடியின இளைஞா் மாயமானாா். அவரைத் தேடும் பணியில் வனத்துறையினரும், உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக எல்லைப் பகுதியான குமுளி பட்டியலினத்தவா் (ஆதிவாசி) குடியிருப்பைச் சோ்ந்த பஞ்சனின் மகன் லிபின் (35). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பா்கள் சிலருடன் பெரியாறு புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள ஓடையில் மீன்பிடிக்கச் சென்றாா். அவருடன் சென்ற நண்பா்கள் அனைவரும் மாலையில் வீடு திரும்பிய நிலையில், லிபின் மட்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வனத் துறையினரும், உள்ளூா் மக்களும் இணைந்து அடா்ந்த வனப்பகுதி, ஓடைப் பகுதிகளில் லிபினைத் தேடி வருகின்றனா். இருப்பினும், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும், லிபினுடன் சென்ற நண்பா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER