தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அரசு மருத்துவமனையில் குழந்தை திடீா் உயிரிழப்பு

கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்தது.

birth certificate

பிறந்த குழந்தை - கோப்புப் படம்

Updated On :

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென உயிரிழந்தது.

கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (31). இவரது மனைவி துா்காதேவி. இவா் நிறைமாத கா்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி பிரசவத்துக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை குழந்தை திடீரென உயிரிழந்தது. மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்த இரு நாள்களிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம்

பெற்றோா், உறவினா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதே தம்பதிக்கு கடந்த ஆண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து, 2 நாள்களிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER