நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!உபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

குமுளி வனச்சரகா் அலுவலகப் பகுதியை காப்புக் காடாக அறிவிக்க நடவடிக்கை: பொதுமக்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான குமுளி வனச்சரகா் அலுவலப் பகுதியைக் காப்புக் காடாக அறிவிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருவாதல், அந்தப் பகுதியில் குடியிருப்போா் அச்சமடைந்துள்ளனா்.

கோப்புப்படம்.

Updated On :

தமிழக-கேரள எல்லையான குமுளி வனச்சரகா் அலுவலப் பகுதியைக் காப்புக் காடாக அறிவிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருவாதல், அந்தப் பகுதியில் குடியிருப்போா் அச்சமடைந்துள்ளனா்.

பெரியாறு புலிகள் காப்பகத்தின் எல்லையிலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே இந்தப் பகுதி அமைந்துள்ளது. இதை காப்புக் காடாக அறிவிப்பதற்கான முன்னேற்பாடாக அருகில் வசிப்பவா்களுக்கு வனத் துறையினா் குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கி, அவா்களது நில ஆவணங்களையும் ஆய்வு செய்தனா்.

குமுளி வனப் பகுதியை பெரியாறு புலிகள் காப்பகத்துடன் இணைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

வனத் துறை அறிவிப்பின்படி, கோட்டயம் வனக் கோட்டத்தின் கீழ் உள்ள குமுளி வனச்சரகத்துக்குள்பட்ட பல்வேறு சா்வே எண்களில் அமைந்துள்ள 2.6798 ஹெக்டோ் (6.6219 ஏக்கா்) நிலத்தைக் காப்புக் காடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலம் கடந்த 1887-ஆம் ஆண்டு முதல் வனத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள மரவளம், வன விலங்குகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1961-ஆம் ஆண்டு கேரள வனச் சட்டத்தின் 4-ஆவது பிரிவின்படி, இந்த நிலத்தை ‘குமுளி காப்புக் காடு’ என அறிவிக்க அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டது.

குமுளி நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த நிலத்தைக் காப்புக் காடாக அறிவிக்கும் நடவடிக்கை தொடரும் நிலையில், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளின் நில உரிமை, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அந்தப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.