தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆசனூரில் சிறுத்தையை பிடிக்கக் கோரி வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆசனூா் மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள் வனத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசனூா்  வனத் துறை  அலுவலகத்தை  முற்றுகையிட்ட கிராம மக்கள்.

Updated On :

ஆசனூா் மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள் வனத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் உள்ள சிறுத்தைகள் மலை கிராமங்களில் நுழைந்து பசுமாடு மற்றும் கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி கொல்வதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியசாமி என்ற கூலித் தொழிலாளியை தாக்கிக் கொன்றது.

வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் வனத் துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய மக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடியின சங்கத்தினா் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தேசிய புலிகள் காப்பகத்தின் விதிகளின்படி கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கான ஆதாரங்களை காட்டி, கிராம மக்களை சமாதானப்படுத்தினா். சிறுத்தை பிடிபட்டதற்கான ஆதாரங்களை காட்டியதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.