சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வீட்டுமனை பட்டா கோரி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய  அந்தியூா்  வட்டாட்சியா்  சக்திவேல்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:34 am IST

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூரை அடுத்த பட்லூா் ஊராட்சி, பெருமாள் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லையாம். இது குறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பவானி தொகுதி மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல், காவல் ஆய்வாளா் சண்முகவேலு மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.