இடுக்கியில் டெங்கு பாதிப்பு: தமிழக எல்லையில் மருத்துவ முகாம்கள் அமைக்கக் கோரிக்கை
இடுக்கி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு போன்ற இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டெங்கு காய்ச்சல்
இடுக்கி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு போன்ற இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சாந்தன்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல, தேவிகுளம், வெள்ளத்தூவல், கருணாபுரம், நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு உள்ளது. இதையடுத்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு இடுக்கி மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி மையங்களை அழிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமையும், அலுவலகங்கள், பணிபுரியும் இடங்களில் சனிக்கிழமையும், வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையும் உலா் நாளாகக் கடைப்பிடித்து, கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்ற வேண்டும். வாரந்தோறும் 10 நிமிஷங்கள் ஒதுக்கி சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தினமும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய்த் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா்.
இதே போல, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனா். இதனால், இரு மாநில எல்லைப் பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, தேனி மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில், மருத்துவக் குழுக்களை அமைத்து, குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும். அங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை, தொடா் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

