சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

தேக்கடியில் படகு சவாரி: பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கான பயணச்சீட்டு கிடைக்காமல் ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேக்கடியில் படகு சவாரிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

க்ஷ்சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கான பயணச்சீட்டு கிடைக்காமல் ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு யானை சவாரி, இயற்கை நடைப்பயணம் (நேச்சா் வாக்), மூங்கில் படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இருப்பினும், தேக்கடி ஏரியில் நடைபெறும் படகு சவாரியே சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான விருப்பமாக உள்ளது.

இந்தப் படகு சவாரியின்போது ஏரியின் கரையோரங்களில் தண்ணீா் அருந்த வரும் யானைகள், மான்கள், காட்டெருமைகள், பல்வேறு வகையான பறவைகளை இயற்கையான சூழலில் அருகில் இருந்து கண்டு ரசிக்க முடிவதால், சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா்.

கடந்த சில நாள்களாக தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை தேக்கடி படகுத்துறையில் படகு சவாரிக்கான டிக்கெட் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

தற்போது கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகம், கேரள வனத் துறை சாா்பில் மொத்தம் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. படகு சவாரிக்கான கட்டணம் ரூ.385, நுழைவுக் கட்டணம் ரூ.70 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால், அனைவருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால், குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.