தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

நேரடியாக வாகனச் சோதனையில் ஈடுபடவில்லை: தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா!

வாகனச் சோதனையில் நான் நேரடியாக ஈடுபடவில்லை என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ

Updated On :

வாகனச் சோதனையில் நான் நேரடியாக ஈடுபடவில்லை என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா தன்னிச்சையாகச் செயல்பட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டதாக ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் அண்ணாமலை விமா்சித்தாா். இதற்கு பதிலளிக்கும் வகையில், கம்பத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் எந்த வாகனத்தையும் சாலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்யவில்லை. மது போதையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளைஞா்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து, இளைஞா்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் காவல் துறையினா் உரிய முறையில் வாகனச் சோதனை நடத்த வேண்டும் என்றுதான் அறிவுறுத்தினேன்.

கம்பத்தில் சில மனமகிழ் மன்றங்களில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கலால் ஆணையா் ஆகியோரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

விரைவில் பொதுமக்களிடையே விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். அப்போது தவெக மாவட்ட இணைச் செயலா் கூடல் செல்வேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.