வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: தேனி மாவட்டத்தில் 2,992 போ் மனு
தேனி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் 2,992 மனுக்கள் பெறப்பட்டன.

தேனி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் 2,992 மனுக்கள் பெறப்பட்டன.
தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1.1.2027 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 1,398 வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 848 மனுக்களும், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 577 மனுக்களும், போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 662 மனுக்களும், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 905 மனுக்கள் என மொத்தம் 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2,992 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

