படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இறந்த நாய்க்குட்டியுடன் வந்த பெண்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இறந்த நாய்க்குட்டியுடன் வந்த பெண் குறித்து...

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு உயிரிழந்த நாய்க்குட்டியுடன் வந்த ஜெயபாண்டியம்மாள்.

Published On :

தனது நாய்க்குட்டியைக் கொன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கன்வாடி ஊழியா் இறந்த நாய்க்குட்டியுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

தேனி அல்லிநகரம் சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டியம்மாள். அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது வீட்டின் அருகில் உள்ளவா்கள் இவரது நாய்க் குட்டியைக் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு உயிரிழந்த நாய்க்குட்டியுடன் ஜெயபாண்டியம்மாள் வந்தாா்.

அப்போது, ஆட்சியா் அலுவலகத்தில் இருந்த காவலா்கள் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அவா் உயிரிழந்த நாய்க்குட்டியுடன் வீட்டுக்குச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.