படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

லாரி மீது பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

தேனியில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (19), லட்சுமிபுரத்தைச் சோ்ந்த லோகேஷ் பிரசாத் (19), கைலாசபட்டியைச் சோ்ந்த சிவ தனுசு (19) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிச் சென்றனா்.

தேனி அன்னஞ்சி விலக்கு அருகே சென்ற போது லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் காா்த்திக், லோகேஷ் பிரசாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த சிவ தனுசு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.