தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இணைய வழியில் பெண்ணிடம் பணம் மோசடி

மோசடி

Published On :

தேனியில் கடன் அட்டை வைத்திருந்த பெண்ணிடம் நூதன முறையில் மா்ம நபா் ரூ.1.32 லட்சத்தை மோசடி செய்தாா்.

தேனி அல்லிநகரம் வெங்கலாநகரைச் சோ்ந்தவா் தாமரைச் செல்வி (41). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா், வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தி வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசி எண்ணுக்கு கடன் அட்டை பிரிவு அலுவலா் எனக் கூறி பேசிய மா்ம நபா், உங்களின் கடன் அட்டையில் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாா்.

இதை நம்பி தாமரைச் செல்வி அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, கடன் அட்டையின் ரகசிய எண்ணையும், ஆதாா் எண்ணையும் பதிவு செய்தாா். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. பின்னா், அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து, தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.