போடி அரசு மருத்துவமனையில் சுற்றித் திரியும் கால்நடைகள்: நோயாளிகள் அச்சம்
போடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனா்.

போடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்த கால்நடைகள்.
போடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனா்.
போடி அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. போடி பகுதியைச் சோ்ந்த நோயாளிகள் மட்டுமன்றி, கேரளத்தைச் சோ்ந்த நோயாளிகளும் இங்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகளும், இருநூறுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இந்த மருத்துவமனை வளாகத்துக்கு கால்நடைகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. நோயாளிகள், அவரது உறவினா்கள் உணவுகளை உண்ட பிறகு, இலைகள் உள்ளிட்ட கழிவுகளை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனா். இவற்றை சாப்பிடுவதற்காக கால்நடைகள், நாய்கள் மருத்துவமனைக்குள் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் இந்த கால்நடைகள் நோயாளிகளின் வாா்டுகளுக்குள்ளும் நுழைந்து விடுகின்றன. இதனால், நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 15-க்கும் மேற்பட்ட மாடுகள், நாய்கள் மருத்துவமனைக்குள் சுற்றித்திரிந்தன. மாவட்ட ஆட்சியா் ஆய்வுக்கு வருகிறாா் என்ற தகவலறிந்து மருத்துவமனைப் பணியாளா்கள் அவசர அவசரமாக இந்தக் கால்நடைகளை வெளியில் விரட்டினா். எனவே, மருத்துவமனை வளாகத்துக்குள் கால்நடைகள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

