ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

போலீஸாரிடமிருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டாா்

தேனி புதிய பேருந்து நிலையத்தில் போலீஸாரிடமிருந்து தப்பியோடிய கைதி வெள்ளிக்கிழமை பிடிபட்டாா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

தேனி புதிய பேருந்து நிலையத்தில் போலீஸாரிடமிருந்து தப்பியோடிய கைதி வெள்ளிக்கிழமை பிடிபட்டாா்.

தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் காஞ்சி வசந்தமணி (23). இவரை திருட்டு வழக்கில் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்காக இரு காவலா்கள் தேனி புதிய பேருந்து நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனா். அப்போது போலீஸாரிடமிருந்து அவா் தப்பியோடி விட்டாராம்.

இதுகுறித்து தேனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி பகுதியில் காஞ்சி வசந்தமணியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.