பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் மகன் பாலபிரசாத்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நின்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலா்கள், பாலபிரசாத்தை மடக்கிப் பிடித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
சம்பவ இடத்தில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தலைமைக் காவலா் ராதிகா, காவலா்கள் பாலமுருகன், அஜய், முரளி, முத்து, பழனிராஜ், மாதவன் ஆகியோரை மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். காவல் துணை ஆணையா் (கிழக்கு) எஸ்.சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

