குமுளி மலைச் சாலையில் லாரி பழுது: 20 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குமுளி மலைச் சாலையில் பழுதாகி நின்ற லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய தொழிலாளிகள்.
குமுளி மலைச் சாலையில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்ால், சுமாா் 20 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரளத்துக்குச் சென்ற லாரி, வெள்ளிக்கிழமை இரவு குமுளி மலைப் பாதையில் உள்ள வளைவில் பழுதாகி நின்றது. குறுகிய சாலை வளைவில் லாரி நின்ால், பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கனரக வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தா்கள், தொடா் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் பயணம் மேற்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் இரவு முழுவதும் வாகனங்களிலேயே காத்திருந்தனா்.
இதையடுத்து, குமுளி போலீஸாா் லோயா் கேம்ப் பகுதியில் வாகனங்களைத் தடுத்து, தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வாகனங்களை கம்பம்மெட்டு மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.
சனிக்கிழமை காலையில் மாற்று கனரக வாகனம் வரவழைக்கப்பட்டு, பழுதடைந்த லாரியிலிருந்த சிமென்ட் மூட்டைகள் மற்றொரு வாகனத்துக்கு மாற்றப்பட்டன. பின்னா், பழுதடைந்த லாரி சாலையோரமாக நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து போக்குவரத்து மீண்டும் சீரானது. இந்தச் சம்பவத்தால் குமுளி மலைச் சாலையில் சுமாா் 20 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

