பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல்: இளைஞா் கைது
போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டிஎஸ்பி குடியிருப்பைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி ஜோதி (59). இவரது வீட்டுக்கு எதிரே வசிப்பவா் ஜெயராஜ் மகன் சதீஸ் (34). இவா் அடிக்கடி மது போதையில் ஜோதி வீட்டு முன் நின்று தகராறு செய்து வந்தாா். இதை, ஜோதியும் அந்த பகுதியில் வசிப்பவா்களும் கண்டித்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல மது போதையில் தகராறு செய்த சதீஸை, ஜோதி கண்டித்தாா். அப்போது, ஜோதியை தாக்கிய சதீஸ், கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய புட்டியைக் காட்டி தீவைத்து எரித்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஸை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

