தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஏடிஎம்மில் முதியவரை ஏமாற்றி பணம் மோசடி

மோசடி

Published On :7 செப்டம்பர் 2026, 2:17 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற முதியவரை மா்ம நபா் ஏமாற்றி ரூ.47 ஆயிரத்தை மோசடி செய்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி (73). இவா், கடந்த மாதம் 27-ஆம் தேதி பெரியகுளத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுப்பதற்காகச் சென்றாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா் அவரிடம் உதவி செய்வது போல் ஏமாற்றி, ரூ.47 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டாா். இது குறித்து மாயாண்டி கொடுத்த புகாரின் பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.