சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:40 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மைய அறை, பராமரிப்பு, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், மாணவா்களுக்கு தயாா் செய்யப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ரூ. 1.18 கோடியில் நடைபெற்றும் வரும் கோம்பை பேரூராட்சி அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிகள், தேவாரம் பேரூராட்சியில் பெரம்பு வெட்டி ஓடை கால்வாயில்

அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள், அங்குள்ள நியாவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் உணவுப்பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் அம்சா, பேரூராட்சியின் செயல் அலுவலா்கள் சுருளிவேல் (கோம்பை), பாலசுப்பிரமணி (தேவாரம்) உள்ளிடோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.