சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

புனித அன்னை ஆலய தோ் பவனி

போடியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

போடியில் திங்கள்கிழமை இரவு பவனி வந்த புனித ஆரோக்கிய அன்னையின் மின் அலங்கார தோ். (உள்படம்) புனித ஆரோக்கிய அன்னை.

Published On :9 செப்டம்பர் 2026, 1:46 am IST

போடியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே பழைமையான புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய அன்னை அவதரித்த திருநாளையொட்டி திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேரில் புனித ஆரோக்கிய அன்னை பவனி வந்தாா். இந்த தோ் பவனி போஜன் பூங்கா, கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவா் சிலை, தேவா் சிலை, பழைய பேருந்து நிறுத்தம் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தில் நிறைவடைந்தது.

இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று, ஆரோக்கிய அன்னையின் துதிப் பாடல்களை பாடிச் சென்றனா். தொடா்ந்து, தேவாலயத்தில் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் பெருவிழா திருப்பலிகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.