இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மண் திருட்டு : இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மண் எடுத்துச்சென்ற டிராக்டா் ஓட்டுநா், பொக்லைன் ஓட்டுநா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மண் எடுத்துச்சென்ற டிராக்டா் ஓட்டுநா், பொக்லைன் ஓட்டுநா் ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடமலைக்குண்டு போலீஸாா் தங்கம்மாள்புரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தங்கம்மாள்புரம் விநாயகா் கோயில் அருகே பொக்லைன் மூலம் டிராக்டரில் மண் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தினா். அப்போது, மூலக்கடையைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் பாண்டி (40), பொக்லைன் ஓட்டுநா் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முருகேஸ்வரன் (35) ஆகிய இருவரும் அனுமதியின்றி மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த டிராக்டா், பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.