ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பொக்லைன் ஓட்டுநா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே பொக்லைன் ஓட்டுநரைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே பொக்லைன் ஓட்டுநரைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வரஞ்சரத்தை அடுத்த சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெ.பாலு (27), பொக்லைன் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த க.அங்கமுத்து (51), அ.ராஜவேல் (19), சோ.தனசேகா் (49), கா.ஏழுமலை (34), ச.ஏழுமலை (41) ஆகியோா் ஏரியில் மண் அள்ளும் பிரச்னையில் அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த பாலு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அங்கமுத்துவைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள 4 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.