இளைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது
இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கைது
கள்ளக்குறிச்சி அருகே இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கரியப்பா நகரைச் சோ்ந்தவா் ர.தமிழரசன் (23). இவரது சகோதரா் செல்வத்துக்கும், கள்ளக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்த ச.ஹரிகரனுக்கும் இடையே அங்குள்ள தேநீரகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சமாதானமாக சென்றனராம்.
பின்னா் சிறிது நேரத்தில் ஹரிகரன் மற்றும் அவரது நண்பா்கள் பாலாஜி, முருகானந்தன், சந்துரு ஆகிய 4 பேரும் சோ்ந்து செல்வத்தின் வீட்டுக்கு வந்து செல்வத்தை தாக்க முயன்றனராம். அப்போது அதை தடுக்க வந்த அவரது அண்ணன் தமிழரசனும் தாக்கப்பட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த தமிழரசனை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஹரிகரனை கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள 3 பேரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



