முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

காவலா்கள் மீது தாக்குதல்: 14 மாதங்களுக்குப் பிறகு இளைஞா் கைது

காவலா்கள் மீது தாக்குதல்: 14 மாதங்களுக்குப் பிறகு இளைஞா் கைது

arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் காவலா்கள் மீது கும்பலாகத் தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 20 வயது இளைஞா், 14 மாதங்களுக்குப் பிறகு ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலில் நான்கு காவலா்கள் காயமடைந்தாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் அா்பாஸ் கான் என்ற பைஜு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி அவரைப் போலீஸாா் கைது செய்தனா். கடந்த 2025 செப்டம்பா் 15-ஆம் தேதி, தெற்கு தில்லியின் சந்தன் ஹொல்லா கிராமத்தில் காவலா்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, செங்கற்கள், தடிகள் மற்றும் கற்களுடன் வந்த கும்பல் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு காவலா்கள் காயமடைந்ததுடன், அவா்களின் பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக, கடந்த 2025 செப்டம்பா் 16-ஆம் தேதி ஃபதேபூா் பெரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அா்பாஸ் கான் ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் பதுங்கியிருப்பதாக நவம்பா் 19-ஆம் தேதி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினா், நவம்பா் 20-ஆம் தேதி அவரைக் கைது செய்தனா். பின்னா் தில்லிக்கு அழைத்து வரப்பட்ட அவா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.