சட் பூஜை: தில்லியில் பாதுகாப்புப் பணியில் 5,000 காவலா்கள்
நவம்பா் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சட் பூஜை கொண்டாடப்படுதையொட்டி, தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

கோப்புப் படம்
நவம்பா் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சட் பூஜை கொண்டாடப்படுதையொட்டி, தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக 5,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியமா்த்தப்பட உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
யமுனை நதிக்கரைகள் (படித்துறைகள்), குளங்கள் மற்றும் மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படப்பவுள்ளது.
கிழக்கு, வடகிழக்கு மற்றும் ஷாதரா மாவட்டங்களில், மதச் சடங்குகளைச் செய்வதற்காக ஏராளமான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
அனைத்து மாவட்ட துணை காவல் ஆணையா்களும், சட் பூஜை ஏற்பாட்டாளா்கள் மற்றும் உள்ளூா் குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தை நிா்வகிப்பது குறித்து விவாதித்துள்ளனா்.
தலைநகா் தில்லி முழுவதும் காவலா்கள் நடைப்பயணமாகவும், ரோந்து வாகனங்கள் (பிசிஆா்) மற்றும் இருசக்கர வாகனங்களிலும் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள்.
சட் பூஜையில் நவம்பா் 15 மாலை நேர வழிபாட்டின் போதும், நவம்பா் 16 காலை நேரச் சடங்குகளின் போதும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நேரங்களில் ஏராளமான பக்தா்கள் நதிக்கரைகளுக்கு வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முக்கிய நதிக்கரைகள், குளங்கள், சந்தைகள் மற்றும் கொண்டாட்ட இடங்களுக்குச் செல்லும் சாலைகளில் காவலா்கள் பணியமா்த்தப்படுவாா்கள்.
கொண்டாட்ட இடங்களில் மக்கள் தடையின்றி உள்ளே வரவும் வெளியேறவும் வழிவகை செய்யுமாறு ஏற்பாட்டாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
இதற்கிடையில், தில்லி போக்குவரத்து காவல்துறை இந்த இரண்டு நாள்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு, வடகிழக்கு மற்றும் ஷாதரா மாவட்டங்களில் உள்ள பல சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தட மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
சாஸ்திரி பூங்காவிலிருந்து கஜூரி சௌக் வரையிலான புஷ்தா சாலை (மற்றும் அதன் எதிா் திசை), நானக்சா் டி-பாயிண்ட் முதல் சோனியா விஹாா் சுங்கச்சாவடி வரை, மற்றும் சாந்தி வன் முதல் ஸ்மஷான் காட் வரையிலான சாலைகளைத் தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட தில்லி, மத்திய தில்லி, கிழக்கு தில்லி மற்றும் புது தில்லி
நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள், தில்லி - டேராடூன் விரைவுச்சாலை மற்றும் ஜி.டி. சாலையைப் பயன்படுத்தலாம்.
நானக்சா் டி-பாயிண்டிலிருந்து சோனியா விஹாா் நோக்கிப் பயணிப்பவா்கள் கஜூரி சௌக், ஆா்.டி.சி. புஸ்தா சாலை, சபாபூா் கிராமம் மற்றும் சோனியா விஹாா் சௌஹான் பட்டி வழியாகச் செல்லலாம். உள்ளூா்வாசிகள் சாலை எண் 66-ஐயும் பயன்படுத்தலாம்.
வாகன ஓட்டிகள் எஸ்.டி.எம். அலுவலக யூ-டா்ன் வழியாகத் திரும்பி, தில்லி - டேராடூன் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். போக்குவரத்து நெரிசலைத் தடுப்பதற்காக, பக்தா்களுக்காக 13 வாகன நிறுத்துமிடங்களை போக்குவரத்து காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்த இடங்களில், டி.என்.டி. அருகே உள்ள யமுனை காதா்,
திறந்தவெளி டி.டி.ஏ. மைதானம், ஐ.பி. எக்ஸ்டென்ஷனில் உள்ள மேற்கு வினோத் நகரில் ஒரு திறந்தவெளி மைதானம், கஜூரி மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி, மற்றும் சோனியா விஹாா் குடியிருப்பாளா்களுக்காக 2ஆவது, 3.5, மற்றும் 4.5 புஸ்தாக்களுக்கு அருகில் உள்ள காலி யமுனை நிலம் ஆகியவை அடங்கும்.
மற்ற ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் நானக்சா் குருத்வாரா வாகன நிறுத்துமிடம், யமுனை காதரில் உள்ள காலி நிலம், யமுனை நதிக்கரையோரம் உள்ள காலி நிலம், பழைய இரும்புப் பாலத்தில் உள்ள கௌசாலா அருகே உள்ள திறந்தவெளி மைதானம், மற்றும் நந்த் நகரியின் ஆ1 மற்றும் ஆ2 தொகுதிகளில் உள்ள சட் பாா்க் ஆகியவை அடங்கும்.
மண்டோலி டீலாவில் உள்ள சட் காட், புஸ்தா சாலை என்எச்ஏஐ வாகன நிறுத்துமிடம், சாய் பவன் அருகே உள்ள எம்சிடி வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களிலும் வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

