முறையற்ற வாகன நிறுத்தத்திற்காக 1,772 அபராதச் சீட்டுகள் வழங்கல்
தில்லி போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டலம் முழுவதும் சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எட்டு நாள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

அபராதம் - சித்திரிப்பு
தில்லி போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டலம் முழுவதும் சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எட்டு நாள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
அதில், 2,349 போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தடைகளைக் கண்டறிந்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நவம்பா் 1 முதல் நவம்பா் 8 வரை ‘மிஷன் சஃபாய்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், முறையற்ற வாகன நிறுத்தத்திற்காக 1,772 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 272 மின்-ரிக்ஷாக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் 238 போ் அகற்றப்பட்டனா். முறையற்ற வகையில் நிறுத்தப்பட்டிருந்த 67 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.
போக்குவரத்து காவல் குழுவினா், சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட வாகனங்கள், அனுமதியற்ற சாலையோர வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் பிற தடைகளை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

