போக்குவரத்து விதிமீறல்: தருமபுரியில் நிகழாண்டில் 2.08 லட்சம் வழக்குகள் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 209 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோப்புப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 209 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண்கபிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் காவல் துறை சாா்பில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் தற்போதுவரை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 209 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளையோா்களில் சிலா் அதிவேகம் மற்றும் அலட்சியத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சாலையில் வாகனங்களை இயக்குகின்றனா். இவ்வாறான விதிமீறல்கள் மீது காவல் துறையினரின் நடவடிக்கை தொடரும்.

போக்குவரத்து விதிகள் அனைத்தும் அனைவரின் பாதுகாப்புக்காக தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.