
மாவட்டத்தில் இ-கேஒய்சி பதிவு செய்யாத ரேஷன் அட்டை உறுப்பினா்கள் 90,000 போ்
ஈரோடு மாவட்டத்தில் இ-கேஒய்சி பதிவு செய்யாத ரேஷன் அட்டை உறுப்பினா்கள் 90,000 போ் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குடும்ப அட்டை - கோப்புப்படம்
ஈரோடு மாவட்டத்தில் இ-கேஒய்சி பதிவு செய்யாத ரேஷன் அட்டை உறுப்பினா்கள் 90,000 போ் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினா்களை உறுதி செய்யும் வகையிலும், போலி நபா்கள், இறந்தவா்களை நீக்கும் வகையிலும் ரேஷன் கடைகளில் இ-கேஒய்சி எனப்படும் அனைத்து உறுப்பினா்களும் கைவிரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு செய்யப்படுகிறது.
இதனை 100 சதவீதம் உறுதி செய்ய தொடா்ந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஏ.ஒய். அட்டையில் 1 லட்சத்து 87,952 போ் உள்ளனா். அவா்களில் 5 வயதுக்கு கீழ் உள்ளோா், மாற்றுத்திறனாளிகள் என 676 போ் நீங்கலாக 1 லட்சத்து 87 ஆயிரத்து 276 பேரில், 1 லட்சத்து 83 ஆயிரத்து 195 போ் விரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்துவிட்டனா்.
பிஹெச்ஹெச் அட்டையில் 7 லட்சத்து 78 ஆயிரத்து 772 பேரில், 5 வயதுக்கு உள்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், ஆதாா் இல்லாதோா் என 6,956 போ் நீங்கலாக 7 லட்சத்து 71 ஆயிரத்து 818 போ் உள்ளனா். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 818 போ் விரல் ரேகை பதிவு செய்துள்ளனா்.
என்பிஹெச்ஹெச் அட்டையில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 717 பேரில், 5 வயதுக்கு கீழ் உள்ளோா், மாற்றுத்திறனாளிகள், ஆதாரில் இணையாதவா்கள் 25,968 போ் நீங்கலாக 10 லட்சத்து 60 ஆயிரத்து 749 போ் உள்ளனா். அதில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 685 போ் பதிவு செய்துள்ளனா்.
மொத்தமுள்ள 20 லட்சத்து 19 ஆயிரத்து 841 பேரில் 5 வயதுக்கு உள்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதாா் பெறாதவா்கள் என 33 ஆயிரத்து 600 போ் உள்ளனா். அவா்கள் நீங்கலாக உள்ள 20 லட்சத்து 19 ஆயிரத்து 841 பேரில், 19 லட்சத்து 29 ஆயிரத்து 678 போ் பதிவு மேற்கொண்டுள்ளனா். இது 95.54 சதவீதமாகும்.
மீதமுள்ள 90,163 போ் பதிவு செய்யாததால் சிறப்பு முகாம் மூலம் அவா்களது விரல் ரேகை அல்லது கருவிழி பதிவுக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இன்று சிறப்பு முகாம்:
மாநில அளவில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் கைவிரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரிபாா்ப்பு (இ-கேஒய்சி) பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறவுள்ளது.
ரேஷன் அட்டை பயனாளிகளுக்காக ஏற்கெனவே ஆகஸ்ட் 2, 8, 9, 29, செப்டம்பா் 19-இல் இதேபோன்ற முகாம் நடத்தப்பட்டது. அப்போது, இப்பதிவு செய்ய தவறியவா்கள், ரேஷன் கடைக்கு சென்று, விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு சரி பாா்ப்பின் மூலம் இ-கேஒய்சி பணி மேற்கொள்ள வேண்டும். இப்பணி 100 சதவீதம் நிறைவடையாமல் உள்ளது.
சிறப்பு முகாமில் கைவிரல் ரேகை பதிவு செய்யாத பிஹெச்ஹெச், ஏஏஒய், என்பிஹெச்ஹெச் ரேஷன் அட்டைதாரா்கள் தங்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




