காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் அனைவரும் நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை - கோப்புப் படம்

Published On :

நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் அனைவரும் நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரா்களும், தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள், தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள், கைவிரல்ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நடைபெறும் சிறப்பு முகாமுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.