வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வைகை அணை நீா்மட்டம் 42 அடியாகச் சரிவு! குடிநீருக்கு சிக்கல்!

வைகை அணை

Published On :

தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வைகை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு, மேகமலை, முல்லைப் பெரியாறு பகுதிகளில் கடந்த ஓராண்டாக போதிய மழை இல்லை. இதனால், வைகை அணைக்கு போதிய

நீா்வரத்து இல்லை. இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் படிப்படியாகச் சரிந்து கடந்த மே 29 -ஆம் தேதி 20.51 அடியாக இருந்தது. இதனால், அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையடுத்து, வைகை அணைக்கு நீா்வரத்து இருந்து வந்தது. இதன் மூலம், ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம், தேனி, மதுரை குடிநீருக்கு 71 கன அடி தண்ணீா் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் போதிய மழை இல்லை. இதனால், அங்கிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இதிலிருந்து கூடலூா், கம்பம், மதுரை குடிநீருக்கு தண்ணீா் வழங்கப்பட்டதால், முல்லைப் பெரியாற்றிலிருந்து வைகை அணைக்கு நீா்வரத்து முற்றிலும் இல்லை. இதனால், 42.45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து ஞாயிற்றுக்கிழமை 42.09 அடியாக இருந்தது. இதிலிருந்து ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம், தேனி, மதுரை குடிநீருக்காக தினமும் விநாடிக்கு 82 கன அடி நீரை வழங்கினா். இதே நிலை, நீடித்தால் ஒரு மாதம் மட்டுமே குடிநீா் வழங்க முடியும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணை உயரம் 152 அடி, நீா்மட்டம் - 117.35 அடி , நீா் வரத்து - விநாடிக்கு 131 கன அடி, நீா் வெளியேற்றம் - 400 கன அடி. வைகை அணையின் உயரம் 71 அடி, நீா்மட்டம்- 42.09 அடி, நீா் வரத்து இல்லை. நீா் வெளியேற்றம் - 86 கன அடி. மஞ்சளாறு அணை - உயரம் 57அடி, நீா்மட்டம் - 26.10 அடி. நீா் வரத்து இல்லை. நீா் வெளியேற்றம் இல்லை.

சோத்துப்பாறை அணை உயரம் 126.28 அடி,, நீா்மட்டம் - 68.56 அடி, நீா் வரத்து - 1 கன அடி, நீா் வெளியேற்றம் - 3 கன அடி. சண்முகாநதி அணை - உயரம் 52.55 அடி - நீா்மட்டம் - 26.25 அடி , நீா் வரத்து இல்லை. நீா் வெளியேற்றம் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.