ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாநில தடகள போட்டி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி மாணவி தேர்வு

மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி க.சுவாதிபாலா (படம்) தேர்வு பெற்றுள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் மண்டல அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார்

News image
Updated On :13 டிசம்பர் 2012, 1:57 pm

கோ.ஜெயக்குமார்

மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி க.சுவாதிபாலா (படம்) தேர்வு பெற்றுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் மண்டல அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின தடகளப் போட்டிகள் ராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, பரமக்குடி, சிவகங்கை, தேவகோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட பள்ளி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.இப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி க.சுவாதிபாலா 17-வயதிற்குட்பட்டோர் பிரிவிற்கான 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்குத் தகுதி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவி க.சுவாதிபாலாவிற்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பரிசு வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் மாணவி க.சுவாதிபாலா, 17-வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் மற்றும் 800 மட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார்.இதே பிரிவில் மாணவி க.தனவதனி வட்டு எறிதலில் முதலிடமும், குண்டு எறிதலில்இரண்டாம் இடமும் பெற்றார்.

இதே பிரிவில் மாணவி ம.அகஸ்தியா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முதலிடம் வென்றார். இப் பள்ளியில் மாணவர் க.பரத்கண்ணன் 19-வயதிற்குட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் வென்றார்.

14-வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் மாணவர் க.கார்த்திக் கண்ணன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் வென்றார். இதே வயதுப் பிரிவில் மாணவி சி.கரிஷ்மா 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் வென்றார்.

மாணவர்கள் கா.நிஷந்த், க.கார்த்திக்கண்ணன், அபிநாத் எஸ்.பவுலஸ் மற்றும் சூரஜ்சண்முகா ஆகியோர் அடங்கிய அணி 4X100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்கில் மூன்றாமிடம் வென்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன், தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார், தலைமை ஆசிரியை ஜெ.ஜெயசீலி, அரிமா சங்கத் தலைவர் வி.ஆர்.நடராஜன், செயலர் ஆர்.முனியாண்டி, பொருளாளர் எல்.சாத்தப்பன் மற்றும் அரிமா சங்கத்தினர், பெற்றோர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.