ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கலசலிங்கம் பல்கலை.யில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு

 விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் இணைந்து 13-15 (வியாழன்-சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் மின்திறன் மற்றும் மின்சக்தி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை நடத்தின.

News image
Updated On :15 டிசம்பர் 2012, 12:54 pm

கோ.ஜெயக்குமார்

 விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் இணைந்து 13-15 (வியாழன்-சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் மின்திறன் மற்றும் மின்சக்தி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை நடத்தின.

கருத்தரங்கை துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கிவைத்து உரையாற்றினார். துறைத் தலைவர் கண்ணன் வரவேற்றார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

கொல்கத்தா, ஜாதல்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சிவாஜி சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது: மாணவர்கள் பட்டப் படிப்போடு படிப்பை நிறுத்திவிடாமல், முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க வேண்டும். அனுபவத்துடன் கூடிய கல்விதான் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய அடிப்படையாக அமையும். மேலும் உயர் அழுத்தம் மற்றும் உயர் திறன் கொண்ட மின்மாற்றிகளைப் பற்றியும் அவற்றில் ஏற்படும் பழுதுகள் குறித்தும் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார்.

ஆஸ்திரேலியா, விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் சுக்தர் கலாம் பேசுகையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி பரிசோதனைக் கூடங்களைக் கண்டு வியந்து பாராட்டினார். மூன்று நாட்களில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் ஆ.ராம்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.