மாவட்ட யோகா போட்டி: மம்சை பள்ளி முதலிடம்
விருதுநகர் மாவட்ட அளவில், சத்திரப்பட்டியில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் மம்சாபுரம், புனித ஜோசப் பள்ளி அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் முதல் பரிசு வென்றது.


விருதுநகர் மாவட்ட அளவில், சத்திரப்பட்டியில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் மம்சாபுரம், புனித ஜோசப் பள்ளி அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் முதல் பரிசு வென்றது.
போட்டியில் இப் பள்ளியின் மாணவர்கள் 57 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் சாம்பியன்ஷிப் முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு சாத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகி குணசேகரன், தலைமை ஆசிரியர் நளினா, ஆசிரியர்கள் வளர்மதி, புகழேந்தீஸ்வரி மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர். போட்டிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...