மாநில சைக்கிள் போட்டி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் நடைபெறும் சைக்கிள் விரைவுப் போட்டியில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் நடைபெறும் சைக்கிள் விரைவுப் போட்டியில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் மண்டல அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சைக்கிள் விரைவு ஓட்டப் போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் விருதுநகர், அருப்புக்கோட்டை, பரமகுடி, சிவகங்கை, தேவகோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு பெற்ற பள்ளி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
இப் போட்யில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயனஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.ஜெனுயின் நிருபா 14-வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் வென்றார்.
17-வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் ரா.ஸ்ரீதரன் முதலிடம் வென்றார். மாணவிகளுக்கான இதே பிரிவில் மாணவி க.சுவாதிபாலா இரண்டாம் இடம் பெற்றார். 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் க.பரத்கண்ணன் இரண்டாம் இடம் பெற்றார். மண்டலப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவி ஜெ.ஜெனுயின் நிருபா மற்றும் மாணவர் ரா.ஸ்ரீதரன் ஆகியோர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் விரைவு ஓட்டப் போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி ஜெ.ஜெனுயின் நிருபா முதலிடமும், மாணவி சௌ.தேன்மொழி இரண்டாம் இடமும் பெற்றனர். இதே வயதிற்கான மாணவர் பிரிவில் மாணவர் கா.நிஷாந்த் இரண்டாம் இடமும், க.கார்த்திக் கண்ணன் மூன்றாம் இடமும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் ரா.ஸ்ரீதரன் முதலிடமும், மாணவர் ஜெ.கரன் மூன்றாம் இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான இதே வயது பிரிவில் மாணவி க.சுவாதிபாலா முதலிடமும், மாணவி க.தனவதனி இரண்டாம் இடமும் பெற்றனர். 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் க.பரத்கண்ணன் முதலிடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன், தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார், தலைமை ஆசிரியை ஜெ.ஜெயசீலி, அரிமா சங்கத் தலைவர் வி.ஆர்.நடராஜன், செயலாளர் ஆர்.முனியாண்டி, பொருளாளர் எல்.சாத்தப்பன் மற்றும் அரிமா சங்கத்தினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...