கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாலுகாக்களில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.-க்கள் பொது கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாலுகாக்களில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.-க்கள் பொது கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்:   அருப்புக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட கட்டங்குடியில் வி.ஏ.ஓ-வாக பணிபுரிந்த நாகலட்சுமி மண்டப சாலைக்கும், தும்முசின்னம்பட்டியில் பணிபுரிந்த மலர்க்கொடி பாலையம்பட்டிக்கும், பாலவநத்தத்தில் பணிபுரிந்த கலைச்செல்வி சின்னபுளியம்பட்டிக்கும் பொதுகலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

   குல்லூர்சந்தை வி.ஏ.ஓ. ஜெயலட்சுமி பெரிய புளியம்பட்டிக்கும், மறவர் பெருங்குடி வி.ஏ.ஓ. கணபதி சுப்புராம் அருப்புக்கோட்டைக்கும், அருப்புக்கோட்டையில் பணிபுரிந்த முத்துராமலிங்கம் பாலவநத்தத்துக்கும், மண்டபசாலை வி.ஏ.ஓ. முருகேசன் சுத்தமடத்துக்கும் மாற்றப்பட்டனர்.

  ஆலடிபட்டி வி.ஏ.ஓ. குருவையா மறவர்பெருங்குடிக்கும், பாலையம்பட்டி வி.ஏ.ஓ.  சுந்தர்ராஜன் காளையார்கரிசல் குளத்துக்கும், பெரியபுளியம்பட்டியில் பணிபுரிந்த செல்லக்காளியம்மாள் போடம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரியாபட்டி தாலுகா திம்மாபுரம் வி.ஏ.ஓ சோமசுந்தரம் சொக்கனேந்தலுக்கும், மல்லாங்கிணர் வி.ஏ.ஓ. கல்யாணசுந்தரம் பந்தனேந்தலுக்கும், ஆ.ரெட்டியபட்டி வி.ஏ.ஓ. பஞ்சவர்ணம் அல்லாளப்பேரிக்கும், அரியனேந்தலில் பணிபுரிந்த ரியாஜ்முகமது கிழவனேரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

 காரியாபட்டி வி.ஏ.ஓ. குருஜோதி திம்மாபுரத்துக்கும், மேலக்கள்ளங்குளம் வி.ஏ.ஓ. இருளாண்டி காரியாபட்டிக்கும், டி.வேப்பங்குளம் வி.ஏ.ஓ. பாலமுருகன் கட்டுக்குத்தகை கரிசல்குளத்துக்கும், அல்லாளப்பேரியில் பணிபுரிந்த பவிதா ஏ.நெடுங்குளத்துக்கும், முடுக்கன்குளம் வி.ஏ.ஓ. பெருமாள்சாமி மல்லாங்கிணறுக்கும், மாங்குளம் வி.ஏ.ஓ.  பாண்டியம்மாள் அரியனேந்தலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

   கிழவனேரி வி.ஏ.ஓ. அசோக்குமார் ஏ.ரெட்டியபட்டிக்கும், திருச்சுழி தாலுகா ஆதித்தனேந்தல் கிராமத்தில் பணிபுரிந்த முருகேசன் சொட்டமுறிக்கும், இருஞ்சிறையில் பணிபுரிந்த பாண்டியன் ஆதித்தனேந்தலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 விருதுநகர் தாலுகாவில் புல்லலக்கோட்டை வி.ஏ.ஓ குப்புசாமி கோட்டைபட்டிக்கும், சென்னல்குடி வி.ஏ.ஓ. சிவக்குமார் விருதுநகருக்கும், ஆனைக்குட்டம் வி.ஏ.ஓ.  செல்வக்குமார் சின்னமூப்பன்பட்டிக்கும், கடம்பங்குளம் வி.ஏ.ஓ. சரவணன் ரோசல்பட்டிக்கும், சின்னவாடியில் பணிபுரிந்த ராம் கார்த்திக்ராஜா அல்லம்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

  தம்மநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. விவேக் கூரைக்குண்டுக்கும், வாடியூர் வி.ஏ.ஓ.  முனியசாமி முத்துராமன்பட்டிக்கும், விருதுநகர் வி.ஏ.ஓ. மாதவராஜ் சின்னவாடியூருக்கும், கோட்டைபட்டி வி.ஏ.ஓ. ராஜேந்திரன் கடம்பங்குளத்திற்கும், ரோசல்பட்டியில் பணிபுரிந்த சங்கரபாண்டியன் ஆணைக்குட்டத்திற்கும், முத்துராமன்பட்டியில் பணிபுரிந்த லதா சீனியாபுரத்துக்கும், கூரைக்குண்டு வி.ஏ.ஓ. பானுமதி மருளூத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com