பாலவநத்தத்தில் பட்டிமன்றம்

அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் பாலவநத்தத்தில் பட்டிமன்றம் நடந்தது. விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் பாலவநத்தத்தில் பட்டிமன்றம் நடந்தது. விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

    மாவட்டப் பிரதிநிதி பிச்சைக்கனி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். பட்டிமன்றத்தை மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார்.  "கருணாநிதியின் புகழுக்கு காரணம், அரசியல் பணியே, இலக்கிய பணியே' என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், மத்திய தொமுச தலைவர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் உறுப்பினர்கள் ஜெயபால், சித்ரா அழகர், ஒன்றிய கவுன்சிலர் அன்புராஜ், ஒன்றிய இளைஞரணி பொன்ராஜ், துணை அமைப்பாளர்கள், அழகுராமானுஜம், தங்கமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com