விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமும் சுகாதாரமுமான இளமையும் என்ற தலைப்பின் கீழ் 7 நாள்கள் கே. மீனாட்சிபுரத்தில் சிறப்பு முகாம் அமைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இம் முகாமில் பல்வேறு கருத்தரங்குகள், களப்பணிகள், மரக்கன்று நடுதல், மகளிர் மேம்பாட்டுக்கான சுயதொழில் பயிற்சி, இலவச பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. முகாமின் துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா அனைவரையும் வரவேற்றார். முகாமில் மாணவிகள் பங்கு பற்றியும் சுகாதாரம் கண், ரத்த தானம், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியம் மற்றும் பயன்கள் பற்றியும் முதல்வர் விளக்கினார். கணிதவியல் துறைத் தலைவர் சந்திரமவுலீஸ்வரன் வாழ்த்துரை வழங்கி, மாணவிகள் மக்களுடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு கூறினார். ஆலடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்லத்துரை வாழ்த்திப் பேசினார். மேலும் மாணவிகளிடம் மக்களிடையே நீரின் மேலாண்மை சுகாதாரம் மற்றும் மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இம்முகாமில் கே.மீனாட்சிபுரம் ஊராட்சி தலைவர் பாண்டி, உதவித்தலைவர் ராஜசேகர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

