செந்திக்குமார நாடார் பள்ளி மாணவருக்கு மாநில பேச்சுப் போட்டியில் 2ஆவது பரிசு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் எம்.எஸ்.பி. செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பேச்சுப்போட்டியில் மாநில அளவில் 2ஆவது இடம் பெற்றார். 
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் எம்.எஸ்.பி. செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பேச்சுப்போட்டியில் மாநில அளவில் 2ஆவது இடம் பெற்றார். 

  11-ம் வகுப்பு மாணவன் மாரிமுத்து மண்டல அளவில் விருதுநகரில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றார். மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மாணவன் மாரிமுத்துவுக்கு அமைச்சர் செல்லபாண்டியன் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் 2ஆம் பரிசை வென்ற மாணவர் மாரிமுத்துவை பள்ளி தலைமையாசிரியர் தேவசகாயம், பள்ளி செயலாளர் செந்தில்குமார், தலைவர் ரத்தினம், துணைத் தலைவர் ஜெயசந்திரன், பொருளாளர் சுப்பையா, பள்ளி புரவலர் எம்.எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் பள்ளி நிர்வாககுழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com