ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

திருச்சுழி பகுதியில் தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருச்சுழி பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

Updated On :10 பிப்ரவரி 2013, 6:59 pm

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருச்சுழி பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

 திருச்சுழி, தமிழ்பாடி, பள்ளிமடம், சென்னிலைகுடி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் வில்போன் மற்றும் இணையதளம் இணைப்பு பெற்றுள்ள

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேவை குறைபாடு காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கடந்த 10 நாள்களாக இப்பகுதியில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது: அடிக்கடி ஏற்படும் மின்தடையால்  பிஎஸ்என்எல் டவர்களில் உள்ள பேட்டரிகள் பழுதடைந்து வருகின்றன. மேலும் மின்தடை நேரங்களில் டவர்களுக்கு மின்விநியோகம் செய்ய ஜெனரேட்டர்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் டீசல் செலவும் அதிகரித்து வருகிறது. டவர்களில் உள்ள பேட்டரிகள் பழுதடைந்து வருவதால் மின்தடை நேரங்களில் பெரும்பாலான டவர்கள் இயங்குவதில்லை. இதனால் வில்போன், செல்போன், இணையதள சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.