யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி. ஒன்றிய திட்டப் பணிகள்: ஒன்றியக் குழுத் தலைவர் திடீர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கடம்பன்குளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணிகளையும், ஆலத்தூரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம்

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 10:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கடம்பன்குளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணிகளையும், ஆலத்தூரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணியையும் ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம், வேலை தரமானதாகவும், முதல்வருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் வகையிலும் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். இதனை அலுவலர்கள் மேற்பார்வை செய்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அவருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.