காவிரி இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு: ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; இலங்கை வாழ்


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அரசிதழில் வெளியானதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க.வினர் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இதனைக் கொண்டாடி தொண்டர்களிடையே பேசுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறியதாவது:
தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; இலங்கை வாழ் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தமிழர்களின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீரை தமிழகத்திற்குப் பெற்றுத் தர தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்து, வெற்றி கண்டுள்ளார். இந்த வெற்றியை தமிழக மக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காட்டுவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த வெற்றி இறைவன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளித்த பிறந்தநாள் பரிசு.
தற்போது காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார் அவர்.நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...